undefined

கண்கலங்காம பார்த்துப்பேன்... மனைவி தேவை... பேனர் வைத்து பெண் தேடும் இளைஞர்!

 

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி பார் என்று சொல்கிற அதே சமூகம் தான் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று சொல்லி வைத்துள்ளார்கள். திருமணத்திற்கு பெண் சம்மதிப்பது என்பதெல்லாம் பல நிபந்தனைகளைக் கடந்தது. அப்பா - அம்மா கூட இருக்க கூடாது, அக்கா, தங்கை இருக்க  கூடாது, சொந்த வீடு வேண்டும், நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்பதில் துவங்கி, வாரம் ஒரு முறை ஷாப்பிங் என இதர நிபந்தனைகளும் உண்டு. பையன் பண்பானவனா, படிச்சவனா, பொண்ணை வெச்சு காப்பாத்துறவனா வேண்டும் என்று பெற்றோர் நினைத்தாலும், அஜித், விஜய் மாதிரியான மாப்பிள்ளைகளுக்காக தவம் இருக்கிற பெண்களும் உண்டு. அதற்கு நாம த்ரிஷா, அசின் மாதிரி இல்ல இருந்திருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

இந்நிலையில், தனக்கு மணமகள் கிடைக்காத விரக்தியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் 'மனைவி வேண்டும்' என விளம்பரம் செய்துள்ளது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இ-ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் தாமோ பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான தீபேந்திர ரத்தோர். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாகவே திருமணத்திற்காக இவரது பெற்றோர் மணமகள் தேடி வந்துள்ளனர். ஆனால் பல்வேறு காரணங்களால் மணமகள் கிடைக்காமல் திருமணம் தள்ளிப் போய் வந்துள்ளது.

பெற்றோர் கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்ப்பதை நிறுத்திவிட்டு, வழிபாடுகளில் மூழ்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரத்தோர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். அப்போது மணமகள் தேட புதுமையான அணுகுமுறை ஒன்றை அவர் கண்டறிந்தார். அதன்படி தன்னுடைய சொந்த விவரங்களான பிறந்த தேதி, தனது உயரம், பிறந்த நேரம், ரத்தப்பிரிவு, கல்வித் தகுதி, அவரது குலம், கோத்திரம் உட்பட அனைத்தையும் குறிப்பிட்டு இந்தியில் பேனர் ஒன்றை அச்சடித்தார். அந்த பேனரை தனது ஆட்டோ ரிக்‌ஷாவில் அவர் பொருத்தியுள்ளார்.

தற்போது செல்லும் இடங்களில் எல்லாம் இவரது இந்த பேனர் கவனத்தை ஈர்த்து வருகிறது. தனக்கு சாதி, மத வேறுபாடுகள் கிடையாது எனவும், எந்த பெண்ணும் தன்னை திருமணத் திட்டத்துடன் அணுகலாம் எனவும் ரத்தோர் தெரிவித்துள்ளார். அவ்வாறு தனக்கு கிடைக்கும் மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து பார்த்துக் கொள்வேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். தற்போது இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!