undefined

நடுவானில்... கணவன்-மனைவிக்கிடையே கடும் சண்டை... அவசரமாக தரையிறங்கிய விமானம்!

 

நடுவானில், பாங்காக் சென்று கொண்டிருந்த விமானத்தில் கணவன், மனைவிக்கிடையே எழுந்த பயங்கர சண்டை காரணமாக அவசரமாக விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கபட்டது.

ஜெர்மனியில் இருந்து தாய்லாந்து பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. நடுவானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த கணவன், மனைவிக்கிடையே கடும் சண்டை உருவானது. இருவரும் அடுத்தடுத்து தாக்கிக் கொண்டதில் விமானத்தினுள் பரபரப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கணவன், மனைவியின் சண்டைக்கான காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. ஆனால், அவர்கள் சண்டையிட்டதால் யாராலும் சமாதானப்படுத்த முடியாமல் விமானம் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது' என்றார்.

இவர்களிடன் சண்டை காரணமாக விமானத்தை பாகிஸ்தானில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டதாகவும், அனுமதி நிராகரிக்கப்பட்டதால் டெல்லியில் தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த ஆண் பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!