இந்தியா முதல் இன்னிங்சில் 518 ரன்கள் குவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், சுப்மன் கில் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 175 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். பின்னர் நிதிஸ் ரெட்டி , கில் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.
குறிப்பாக கில் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார் . தொடர்ந்து ஆடிய கில் சதமடித்து அசத்தினார் . மறுபுறம் நிதிஷ் ரெட்டி 43 ரன்களுக்கும் பின்னர் வந்த துருவ் ஜுரேல் 44 ரன்களுக்கும் வெளியேறினர். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. கில் 129 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!