அசத்தல்... சீனாவை  முறியடித்து இந்தியா தங்கம் வென்று சாதனை!!

 

19 ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பதக்கப்பட்டியலை தொடங்கி விட்ட இந்தியா இன்று காலை முதலே பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர்.   இதன் காரணமாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10ஐ எட்டியுள்ளது.  இன்று காலை தொடங்கிய துடுப்பு படகு பிரிவில் இரு வெண்கலம் பதக்கத்தை இந்திய வீரர்கள் வென்றனர்.

அதேபோல் துப்பாக்கிச்சுடுதலில் ஆடவர் அணி 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்று அசத்தல் சாதனை படைத்துள்ளது. இது நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா வெல்லும் முதல் தங்கபதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமல்லாமல் ருத்ரன்ஷ் பாட்டீல், திவ்யன்ஷ் பன்வார் மற்றும் ஐஸ்வரி தோமர் ஆகியோர் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளனர். இதுவரை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது சீனாவின் 1893.3 புள்ளிகள் தான்  அதிக புள்ளிகள் என்ற சாதனையாக இருந்தது.

அதனை  முறியடித்து இந்திய அணி வீரர்கள் 1893.7 புள்ளிகள் பெற்று சீனாவின் சாதனையை வென்றுள்ளனர்.  அடுத்ததாக 25 மீட்டர் ரேபிட் ஃபையர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய ஆடவர் அணி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் அனித் பன்வாலா, விஜய்வீர் சித்து, ஆதார்ஷ் சிங் ஆகியோர் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர். அதேபோல் துப்பாக்கிச்சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இதன் காரணமாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதால் வீரர்கள் உற்சாகத்துடன் விளையாடி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!