உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்... இந்திய வீரர் சுஜீத் கல்கல் தங்கம் வென்று சாதனை!
செர்பியாவின் நோவி சாட் நகரில் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்று பதக்கங்களுக்காக கடுமையாக போட்டியிட்டனர்.
இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சுஜீத் கல்கல் 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். அவரது இந்த வெற்றி இந்திய அணிக்கு பெருமை சேர்த்தது.
நேற்றுடன் முடிவடைந்த இந்த தொடரில் இந்தியா மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றியது. இதில் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். மல்யுத்த உலகில் இந்திய வீரர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!