அதிர்ச்சி... இந்திய வைரச்சுரங்க  உரிமையாளர் விமான விபத்தில் உடல் கருகி பலி!!

 

ஜிம்பாப்வே நாட்டில் நடுவானில் திடீரென தனியார் விமானம் வெடித்தது. இந்த கோர  விபத்தில் இந்தியாவில் வசித்து வரும் கோடீஸ்வரர்  அவரது 22 வயது மகன்  உட்பட 6 பேர்  உயிரிழந்தனர்.முரோவா நகரில் உள்ள வைர சுரங்க   உரிமையாளர்  ஹர்பால் ரந்தாவா. இவர் , இந்தியாவை சேர்ந்தவர். இவர்  மகன் மற்றும் நண்பர்களுடன் தலைநகர் ஹராரேவில் இருந்து முரோவா நகருக்கு தனி விமானத்தில்சென்று கொண்டிருந்தார்.  

விமானம் முரோவா நகர் அருகே சென்ற போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானிலேயே விமானம் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 6 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.ஹர்பால் ரந்தாவா ரியோசிம்   நிறுவனத்தின் உரிமையாளர்  . சுரங் நிறுவனமான ரியோசும்,  தங்கம் மற்றும் நிலக்கரி உற்பத்தியுடன், நிக்கல், செம்பு சுத்திகரிப்பு உட்பட  பல பணிகளை இந்நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.


ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார் பங்கு நிறுவனமான ஜெம் ஹோல்டிங்ஸின் நிறுவனர். இவருடன் மரணமடைந்த இவரது மகனுக்கு 22 வயது தான்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!