காதலி கண்முன்னே இந்திய வம்சாவளி தொழிலதிபர் கொலை... காரில் சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டதால் விபரீதம்!
கனடாவின் எட்மண்டன் நகரில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டதற்காக தாக்கிய நபர் கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எட்மண்டனில் வசித்தவர் ஆர்வி சிங் சாகூ (55). தொழிலதிபராக இருந்த இவர் சில ஆண்டுகளாக கனடாவில் குடியேறி வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று இரவு, தனது காதலியுடன் அருகிலுள்ள ஓட்டலுக்கு சென்று இரவு உணவு அருந்தியார். பின்னர் அவர்கள் இருவரும் காரை நோக்கி வெளியே வந்தபோது, ஒருவன் அவரது காரின் மீது சிறுநீர் கழித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தடுக்க ஆர்வி சிங், “என் காரில் ஏன் இப்படிச் செய்கிறாய்?” எனக் கேட்டார். அதற்கு எதிர்பாராதவிதமாக அந்த நபர் கடுமையாக பதிலடி கொடுத்ததோடு, “எனக்கு விருப்பம் வந்தால் இதைத்தான் செய்வேன்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென கோபமடைந்த அவர், ஆர்வி சிங்கை தலையில் மோசமாக தாக்கினார். காயத்தால் நிலைகுலைந்த சிங் சாகூ தரையில் விழுந்தார்.
இந்த காட்சியை நேரில் கண்ட அவரது காதலி உடனே போலீசாரை அழைத்துத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மயங்கி கிடந்த ஆர்வி சிங் சாகூவை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், கடுமையான தலையடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய கைப் பாபின் (40) என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆர்வி சிங் சாகூ, கனடாவில் குறிப்பிடத்தக்க தொழிலதிபராக இருந்தவர் என்பதும், அவரது மரணம் எட்மண்டன் இந்திய சமூகத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!