undefined

ஒருவழியாக நடிகர் சிம்புவுக்கு கல்யாணம்..? பிரபல நடிகர் குடும்பத்தில் சம்மந்தம் பார்த்த டி.ஆர்..!

 

சிம்பு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2002ல் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பிறகு சில வெற்றிப் படங்களை கொடுத்த சிம்பு, பல சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகி விட்டார்.

சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான  மாநாடு, வெந்து தனிந்தது காடு, பத்து தலை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இருப்பினும் 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணமாகாமல் தனிமையில் இருக்கிறார். இதனால் அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிம்பு இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

முன்னதாக சிம்புவும் நயன்தாராவை காதலித்து வந்தார். ஆனால் இருவரும் பின்னர் பிரிந்தனர். பின்னர் நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் காதலிப்பதாக தகவல் வெளியானது. பின்னர் ஹன்சிகாவும் பிரிந்தார். சமீபத்தில் தெலுங்கு நடிகை நிதி அகர்வாலும், சிம்புவும் காதலித்து வருவதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. ஆனால், அது வெறும் வதந்திதான்.

இந்நிலையில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதால், விரைவில் சிம்புவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறார். இதற்காக சிம்புக்கு தீவிரமாக பெண் தேடி வருகிறார்.மேலும் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியின் மகளையும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க டி.ராஜேந்தரா முடிவு செய்துள்ளார். அவர் வேறு யாருமல்ல நடிகை வரலட்சுமி.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஜோடி ராதிகா - சரத்குமார். சரத்குமாரின் மூத்த மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். குணச்சித்திர வேடங்களிலும், வில்லி கேரக்டர்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் வரலட்சுமி. இவரும் விஷாலும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சிம்புவும் வரலட்சுமியும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க