“தப்பு தான்...” மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவக்குமார்... ட்ரோல் ஆகும் வீடியோ!
காரைக்குடியில் சால்வையை ஆவேசமாக தூக்கி வீசி எறிந்த நடிகர் சிவக்குமார், பொது இடத்தில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டார்.
காரைக்குடியில் நேற்று முன் தினம் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து திரும்பிய அவருக்கு முதியவர் ஒருவர் சிரித்த முகத்தோடு சால்வை கொடுக்க வந்தார். ஆனால், அதை வெறுப்புடன் சிவகுமார் விசிறி எறிந்தார்.
அந்த வீடியோவில் தன் நண்பர் கரீமுடன் பேசியிருக்கும் அவர், “காரைக்குடி சால்வை விவகாரத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இவர் யாரோ எவரோ கிடையாது. என் தம்பி இவர். எனது 50 ஆண்டு கால நண்பர். என்னுடைய திருமணத்தில் பல வேலைகளை முன்னிருந்து செய்தவர். இவருடைய திருமணத்தையும் நான் தான் செய்து வைத்தேன்.
பொதுவாக நிகழ்ச்சிகளில் யாராவது சால்வை போர்த்த வந்தால் அவர்களுக்கே திரும்ப போர்த்தி விடுவேன். எனக்கு சால்வை போர்த்தும் பழக்கம் இல்லை. நிகழ்ச்சி முடிய நேற்று பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டது. சோர்வுடன் இருந்தபோதுதான் கரீம் எனக்கு சால்வை போர்த்துவது பிடிக்காது எனத் தெரிந்துமே சால்வையுடன் நின்றிருந்தார்.
தெரிந்தே சால்வையுடன் நின்றிருந்தது அவர் தப்பு என்றால், அதை பொது இடத்தில் வாங்கி கீழே எறிந்ததும் என் தப்பு தான். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!