undefined

 பரபரப்பு... மீண்டும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ்  பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் படுகாயம்!

 
 


 
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்துக்கும், பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களுக்கும் இடையில் இயக்கப்படும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அக்டோபர் 7ம் தேதி  காலை 8.15 மணிக்கு  ஜகோதாபாத் வழியாக குவேட்டாவுக்கு சென்று  மேற்கொண்டிருந்தது.அப்போது, சிந்து மாகாணத்தின் ஷிர்காப்பூர் மாவட்டத்தின் சுல்தான் கோட் ரயில் நிலையம் அருகில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது அதன் தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  


இந்தத் தாக்குதலில், ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில், 7 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், ரயிலில் இருந்து பயணிகளை வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த 7 பயணிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே கடந்த மாதம்  நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இத்துடன், இந்த ரயிலானது மார்ச் மாதம் பலூசிஸ்தான் விடுதலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் மீட்கப்பட்டதுடன் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?