உஷார்... 20 சவரன் நகை, ரொக்கம் கொள்ளையடித்த பழைய பேப்பர்காரர்!
சென்னை ஆர்.ஏ.புரம் வள்ளீஸ்வரன் தோட்டம் பி-பிளாக் பகுதியில் வசிக்கும் ராஜா (40), பழைய பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தவர். கடந்த 7ம் தேதி, ராஜாவின் தாய் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றபோது, மாலை திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த 20 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மாயமாகி கிடந்தது.
அதே நாளில், ஏ-பிளாக் பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சரவணன் (38) என்பவரின் வீட்டையும் உடைத்து 2 கிராம் தங்கம் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து இருவரும் அபிராம்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில், ஆர்.ஏ.புரம் பகுதியில் பழைய குற்றவாளி சரவணன் (36) என்பவர் இரு சம்பவங்களுக்கும் தொடர்புடையவர் என வெளிப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து, 20 சவரன் தங்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!