ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் அருமையான   வேலைவாய்ப்பு!

 


 
பொதுத்துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா  நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை  உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 27 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : 06/2025
பணி: Assistant Manager
1.Management
பணியிடங்கள்: 20
தகுதி : Business Management, Shipping, Logistics, Maritime, Supply Chain Management, International Trade, Foreign Trade, Finance ஆகிய பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Finance
பணியிடங்கள்: 8
கல்வித் தகுதி : CA, CMA, ICMA பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. HR, Personnel
பணியிடங்கள்: 4
கல்வித் தகுதி: Personal Management, HRD,HRM,Industrial Relations, Labour Welfare ஆகிய பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Law

பணியிடங்கள் : 2
கல்வித் தகுதி : சட்டப் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5.Civil Engineering
பணியிடங்கள்: 2
கல்வித் தகுதி : Civil Engineering பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம்  
6. Electrical Engineering
பணியிடங்கள்: 2
கல்வித் தகுதி: Electrical Engineering பிரிவில் 60% மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும்.
7. Mechanical Engineering
பணியிடங்கள் : 8
தகுதி: Mechanical Engineering-ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8.Information Technology
பணியிடங்கள் : 3
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் Information Technology, Computer Science ஆகிய பிரிவில் 60 சதகவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் அல்லது Computer Application இல் இளநிலைப் பட்டம்  
9.Fire & Safety
பணியிடங்கள்: 2
கல்வித் தகுதி : Fire & Safety Engineering பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம்  
10.Naval Architect
பணியிடங்கள் :2
கல்வித் தகுதி: Naval Architecture பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம்  
11.Company Secretary
பணியிடங்கள்: 2
கல்வித் தகுதி: Company Secretary படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.


சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,60,000
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, இஎஸ்எம் பிரிவினர் ரூ.100, இதர அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.shipindia.com>Careers>Shore>CurrentRecruitment> என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.9.2025

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?