ஜாய் கிரிசில்டா எனது மனைவி... அவரது குழந்தைக்கு நான் தான் தந்தை... மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புதல்!
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ், ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தனது மனைவி ஸ்ருதியுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதே சமயம், ஜாய் கிரிசில்டா — “ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார்” என்று புகார் அளித்திருந்தார்.
2023 ஆம் ஆண்டு தங்களது திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார். இதனையடுத்து, அவர் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். இரண்டு முறை விசாரணை நடந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார்.
சமீபத்தில் ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்ததையும், குழந்தையின் தந்தை தானே என்பதையும் ரங்கராஜ் ஒப்புக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.இந்தச் சம்பவம், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!