undefined

 கரூர்  கூட்ட நெரிசல் பலி... இன்று  தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை ! 

 
 

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிபிஐ அதிகாரிகள் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர். இது வழக்கின் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, சிபிஐ அதிகாரிகள் கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் விரிவான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். அங்கு டீக்கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தியதுடன், சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தின்  முப்பரிமாண மாதிரி பதிவுகளையும் (FARO FOCUS கருவியால்) தயாரித்தனர்.

பனையூரில் நடைபெறும் இன்றைய விசாரணையில், கூட்ட ஏற்பாடுகள், அனுமதி செயல்முறைகள் மற்றும் கட்சியின் பொறுப்புகள் தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்படவுள்ளன. தவெக தலைவர் விஜய், விபத்திற்குப் பிறகு உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சந்தித்து நிவாரணம் வழங்கியிருந்தார். தற்போது நடைபெறும் சிபிஐ விசாரணை, நிகழ்ச்சியின் ஏற்பாடு மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை தெளிவுபடுத்தும் முக்கிய கட்டமாகும். விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!