பட்டப்பகலில் இளம்பெண் கடத்தல்... பகீர் சிசிடிவி காட்சி...!!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் நகா சந்திரவதனி அருகே உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் வழக்கம்போல், பலர் பெட்ரோல் போட்டபடி இருந்தனர். இந்த நிலையில், பைக்கில் வந்த 2 பேர் திடீரென சிறுமி ஒருவரை கடத்தி சென்றனர். அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தும் மற்றொருவர் முகம் தெரியாத வகையில் துணியால் மறைத்தும் வந்திருந்தனர்.
இதனால், சிறுமியை பிடித்தபடி பின்னாலேயே ஓடுகிறார். பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் சிலர் இதனை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஏ.எஸ்.பி. ரிஷிகேஷ் மீனா கூறும்போது, சிறுமிக்கு வயது 19 இருக்கும் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமியின் இருப்பிடம் பற்றி கண்டறியும் முயற்சியும் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!