குலசை தசரா... கற்பக விருட்சத்தில் முத்தாரம்மன் வீதி உலா... அலைகடலென திரண்ட பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் குலசை முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று முன்தினம் காலையில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி விரதமிருந்த பக்தர்கள் பலரும் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றில் காப்பு கட்டினர். முதல்நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2ம் நாள் திருவிழாவான நேற்று இரவில் முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் வீதியுலா வந்தார்.
இன்று செப்டம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை இரவில் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் (பார்வதி திருக்கோலம்) வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி வேடமணிந்து செல்வர். அக்டோபர் 2 ம் தேதி இரவு 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
மகிஷாசுரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும் நடைபெற உள்ளது. 11ம் நாள் திருவிழாவில் அன்னை முத்தாரம்மன் பூப்பல்லக்கில் திருவீதியுலா புறப்பட்டு கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் கொடியிறக்கம் நடைபெறும். அப்போது பக்தர்கள் காப்புகளை களைந்து விரதத்தை முடிப்பார்கள்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!