undefined

குலசை தசரா திருவிழா தொடங்கியது... லட்சக்கணக்கில் பக்தர்கள்..  200 சிறப்பு பேருந்துகள்... 4,000 போலீசார் பாதுகாப்பு!

 

இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பல்வேறு மாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்தும் குலசேகரப்பட்டினத்தில் குவிந்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் 4,000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் அக்.2ம் தேதி மகிசா சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.  திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள், வேடமணிந்து வருபவர்கள் உலோகத்தினால் ஆன வேல், சூலாயுதம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில்,  பக்தர்கள் வசதிக்காக 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள், 280 கழிப்பிடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தம், 6 இடங்களில் வாகன நிறுத்தங்கள், தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப் பாதை, 64 கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேர மருத்துவ வசதி, தயார் நிலையில் தீயணைப்பு வாகனம், பல்வேறு இடங்களில் இருந்து குலசேகரப்பட்டினத்திற்கு 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், கொடியேற்ற நாளில் 1000 போலீசாரும், அக். 1, 2ம் தேதிகளில் 4,000க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?