2 வயது மகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்... நெகிழ்ச்சி தந்தை !!

 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மேலத்தெரு பகுதியில் வசித்து வரும் தம்பதி   சௌந்தர பாண்டியன் - மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு சபரி வாசன் என்ற மகனும் சக்தி பிரக்யா என்ற மகளும் இருந்தனர். இதில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த  2வயது சக்தி பிரக்யா   குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.  மகளின் நினைவுகளால் தவித்து வந்த  தந்தை சௌந்தர பாண்டியன் தங்களது வீட்டு பூஜை அறையில் மகளின் புகைப்படத்தை   தினமும் வழிபட்டு வந்தார்.

அதே நேரத்தில்  மகளின் நினைவாக 3  வருடங்களுக்கு முன்பு ஆலயம் கட்டும் பணியினையும் தொடங்கினார்.  ஆலய கட்டுமான பணி நிறைவடைந்து இன்று அதற்கான குடமுழுக்கு விழாவும் நடத்தியுள்ளார்.  இந்த கோவிலில்  தனது குழந்தை சாயலில் அம்மன் சிலை வைத்து ஸ்ரீ சக்தி பிரக்யா அம்மன் என்கிற பெயரில் கோவில் எழுப்பியுள்ளார்.  அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து குடமுழுக்கும் நடத்தப்பட்டுள்ளது.  

இந்த செயலை கண்டு வியந்த ஊர் மக்கள் ஒன்று கூடி இந்த ஆலய குடமுழுக்கில் கலந்து கொண்டு வழிபாடுசெய்தனர்.  இந்த கோவிலுக்கு வேத விற்பன்னர்களை வைத்து யாகம் வளர்த்து ஆகம விதிமுறைப்படி  செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த மகளுக்காக கோவில் கட்டி வழிபாடு செய்து வருவது அப்பகுதி முழுவதும் பெரும் நெகிழ்ச்சியையும், பேசு பொருளாகவும் ஆகியுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!