நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு லைகா சுபாஸ்கரன் ரூ 1 கோடி நிதியுதவி..!!
நடிகர் ராகவா லாரன்சின் “சந்திரமுகி 2” செப்டம்பர் 15ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல் வெளியாகி பெரும்வைரலாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சந்திரமுகி 2 திரைப்படம் இயக்குநர் பிவாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், ஒரு கோடி நிதியுதவி வழங்கினார். லைகா புரொடக்ஷன் சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸின் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!