undefined

பாடகர் ஸுபினுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட  லட்சக்கணக்கான ரசிகர்கள்...   லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்!

 


 
 
சிங்கப்பூரில் நடைபெற்ற இசை  நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த பிரபல அஸ்ஸாம்  பாடகர் ஸுபின் கார்க், ஸ்கூபா டைவிங் சாகசத்திலும் ஈடுபட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு செப்டம்பர் 19 ம் தேதி பலியானார்.  அவரது உடல் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டு கௌகாத்தி  மருத்துவ கல்லூரியில் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 23ம் தேதி  காலை 7.30 மணிக்கு  எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையில் 2-வது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
அவரது ரசிகர்கள் ஸுபினின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த இரவு முழுவதும்  மருத்துவமனைக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் ஸுபினின் உடலுக்கு பாரம்பரிய துணியான 'அசாமிய கமோசா' போர்த்தப்பட்டு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டது.
ஸுபினின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அர்ஜுன் போஹேஸ்வர் விளையாட்டு திடலில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரது உடலுக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, பூடான் மன்னர், பாடகர் பாபோன் ஆகியோர்  மரியாதை செலுத்தவுள்ளனர். கமர்குச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஸுபினின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.


ஸுபினின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.  இது தற்போது  லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.  பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன், போப் ஃபிரான்சிஸ், ராணி எலிசபத்துக்கு பிறகு அதிகம் பேர் அஞ்சலி செலுத்திய பிரபலம் சென்ற சாதனையுடன் லிம்கா சாதனை புத்தகத்தில் ஸுபினின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜுபின் கார்க்கின் மறைவுக்கு அசாம் மாநில அரசு, 3 நாள் துக்கம் அறிவித்துள்ளது.இதனையடுத்து கௌகாத்தியில்  கடைகள் அடைக்கப்பட்டன.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?