தீபாவளி பட்டாசு வெடிக்க இந்த பாதுகாப்பு வழிமுறைகளைத் தெரிஞ்சுக்கோங்க!
தீபாவளி பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்க வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிஞ்சுக்கோங்க.
தீபாவளி காலத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க புதுச்சேரி சுகாதாரத்துறை சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளது.
முக்கியமான அறிவுறுத்தல்கள்:
-
பட்டாசு வாங்கும் போது:
-
சட்டபூர்வமான, பசுமை பட்டாசுகள் மட்டும் வாங்கவும்.
-
அனுமதி பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும்.
-
-
-
பட்டாசு வெடிக்கும் போது:
-
வீட்டு அருகே, பள்ளிவாசல், மருத்துவமனை, பள்ளி போன்ற அமைதிப் பகுதிகளில் வெடிக்க வேண்டாம்; திறந்தவெளி பாதுகாப்பான இடத்தில் மட்டுமே வெடிக்கவும்.
-
பருத்தி ஆடைகள் அணிய வேண்டாம்; எளிதில் தீப்பிடிக்கும் பாலியஸ்டர் உடைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
-
அருகில் தண்ணீர் மற்றும் மணல் வைத்திருத்தல், அவசர நிலை தீ அணைக்கும் கருவி உபயோகப்படுத்தலாம்.
-
குழந்தைகள் பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்; சிறுவர்களுக்கு எளிய பட்டாசுகள் மட்டும்.
-
பட்டாசு செயல்படவில்லை என்றால் மீண்டும் ஏற்றாமல் நீரில் மூழ்கடித்து கைவிடவும்.
-
விளக்கு, மெழுகுவர்த்திகள் போன்றவற்றை வெடிகளுக்கு அருகே வைக்க வேண்டாம்.
-
-
வீட்டில் சிறுவர் மற்றும் முதியவர்கள் இருந்தால்:
-
ஜன்னல்கள், கதவுகளை மூடிவைத்து புகை புகாத வகையில் கவனம் செலுத்தவும்.
-
காற்று மாசு அதிகரிக்கும் வாய்ப்பில் முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப்படுகிறது.
-
ஆஸ்துமா நோயாளிகள் பட்டாசு புகை விலகி இருக்கவும், இன்ஹேலரை அருகில் வைத்திருத்தல் அவசியம்.
-
-
செல்லப்பிராணிகள் பாதுகாப்பு:
-
வீட்டுக்குள் பாதுகாப்பாக வைத்திருத்தல்.
-
பசுமை பட்டாசு பயன்படுத்தி காற்று மாசுபாட்டை குறைக்கலாம்.
-
-
பட்டாசுகள் மற்றும் எரிந்த பொருட்கள் சேகரிப்பு:
-
வெடித்த பட்டாசு, எரிந்த கம்பி மத்தாப்புகளை தண்ணீரில் ஊற்றி தனியே சேகரிக்கவும்.
-
பூவானம் போன்ற தீப்பொருட்கள் கிளம்பும் போது குழந்தைகளின் முகத்தை தூரமாக வைக்கவும்.
-
கைகளில் பிடித்து எரிப்பதை தவிர்த்து தீக்காயங்களைத் தடுக்கும்.
-
பாதுகாப்பும் சுற்றுச்சூழல் அக்கறையும் கூடிய தீபாவளி கொண்டாட்டம் உங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் மகிழ்ச்சியை தரும் என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செவ்வேள் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!