5 நாட்களில் நாட்டை விட்டு வெளியேறுங்க... கனடாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா!!

 

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு   பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இதனையடுத்து  கனடா தூதரக அதிகாரி ஒருவரை இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  காலிஸ்தான் பயங்கரவாதியின் படுகொலை தொடர்பாக இந்தியா-கனடா இடையே சர்ச்சையும், முரண்பாடும் தொடர்கின்றன.

இந்நிலையில் செவ்வாய்கிழமை இந்தியாவுக்கான கனடாவின் தூதரக அதிகாரி கேமரூன் மேக்கே டெல்லியில் சவுத் பிளாக்கில் உள்ள வெளியுறவுத்துறை தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார். 


இந்த சந்திப்பில்  கனடா பிரதமர் இந்தியா மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றும் கனடாவின் முடிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு  பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரி ஒருவரை  அடுத்த 5 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு  விவகாரங்களில் கனடா தூதர்களின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவிற்கான இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக மத்திய அரசு கனடா தூதராக மூத்த அதிகாரியை வெளியேற்றி இருப்பதால் இருநாடுகளின் உறவு மேலும் விரிசலடைந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை