தூங்கிக்கொண்டிருந்த விருந்தினர்கள் வாயில் மது... வினோத திருமண சடங்கு வீடியோ!
ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின் மறுநாள் காலையில், விருந்தினர்களை எழுப்ப மணமகள் தரப்பினர் கையாண்ட விசித்திரமான முறை இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அறைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, மணமகள் தரப்பைச் சேர்ந்த பெண்கள் திடீரென உள்ளே புகுந்துள்ளனர். அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்களைத் தட்டி எழுப்பாமல், அவர்களின் வாயில் நேரடியாக மதுபானத்தை ஊற்றி எழுப்பிய காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், இது நகைச்சுவைக்காகச் செய்யப்பட்ட ஒரு ஜாலியான நிகழ்வுதான் என ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இணையத்தில் வைரலாவதற்காகவும் கவனத்தை ஈர்ப்பதற்காகவுமே இதுபோன்ற அத்துமீறல்கள் அரங்கேற்றப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், நவீனக் காலத் திருமணங்களில் சடங்கு என்ற பெயரில் எல்லை மீறுவது சரியா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!