undefined

பங்குச்சந்தையில் நஷ்டம்... மகனைக் கொன்று தற்கொலை செய்துக் கொண்ட அரசு ஊழியர்... தீவிர சிகிச்சையில் மனைவி!

 

பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உளைச்சலுக்குள்ளான மத்திய அரசு ஊழியர் ஒருவர், மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி உயிருக்கு போராடி வருகிறார்.

சென்னை அண்ணாநகர் மேற்கு 18-வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணன் (38). இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் மூத்த கணக்காளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி நிவேதிதா (35) தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு லவின் கண்ணன் என்ற 7 வயது மகன் உள்ளார்.

நேற்று காலை 10 மணியளவில் வீட்டுக்குள் இருந்த நிவேதிதா திடீரென சத்தம் போட்டதை கேட்ட நவீன் கண்ணனின் பெற்றோர் அறைக்குள் ஓடிச் சென்றனர். அப்போது நிவேதிதா கழுத்தில் காயமடைந்த நிலையில் கிடந்தார். அருகில் அவர்களின் மகன் லவின் உயிரிழந்திருந்தார். இதையடுத்து அவர்கள் உடனே அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் நிவேதிதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இதுகுறித்த தகவல் திருமங்கலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், வீட்டை விட்டு வெளியேறிய நவீன் கண்ணன், பின்னர் வில்லிவாக்கம்–கொரட்டூர் இடையே சென்ற சதாப்தி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில், நவீன் கண்ணன் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்ததாகவும், அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் மகனை கொன்று தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கலாம் என அவர்கள் கூறினர்.

இந்த சம்பவத்தில் மனைவி நிவேதிதா தற்கொலைக்கு முயன்றதும், நவீன் கண்ணன் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த துயரச்சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?