undefined

ரூ25,00,00, 000/-... பம்பர் பரிசுத் தொகை...  பெயிண்ட் கடை தொழிலாளிக்கு  லாட்டரியில் அடித்த யோகம்! 

 
 

கேரளாவில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் நடைபெற்று முடிந்துள்ளது.  இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில்  ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.  முதல் பரிசாக  ஒரு நபருக்கு ரூ25 கோடி, இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ரு1.கோடி, மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.  

அத்துடன் மேலும் பலருக்கு ரூ5 லட்சம், ரூ2 லட்சம் மற்றும் பல தொகைகள் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தன.  பம்பர் பரிசு கோடிகள் மற்றும் லட்சங்களாக இருந்ததால் லாட்டரி சீட்டுகளை பலர் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் ஓணம் பண்டிகை பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டுகள் 70 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி சக்கை போடு போட்டன. 

இந்நிலையில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் அக்டோபர் 4ம் தேதி  நடைபெற்றது. இதில் TH577825 என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண் லாட்டரி டிக்கெட்டை வாங்கி சென்ற அதிர்ஷ்டசாலி சரத் நாயர். இவர்  ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு தான்  ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு அடித்திருப்பது தெரியவந்தது. பரிசுத்தொகை அடித்த சரத் நாயர், நிப்பான் பெயிண்ட் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?