காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது.. ஒடிசாவில் கரையை கடக்கிறது!
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. ஒடிசாவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கேரளத்திலும், வடமாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே கேரளத்திலும், தமிழக எல்லைகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ள நிலையில், வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா