மெட்ரோ ரயிலில் பயணித்த நுரையீரல்... உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 21 நிமிடங்களில் !
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, மாற்று அறுவை சிகிச்சைக்காக மனித உறுப்புகளை எடுத்துச் செல்லும் வகையில் மெட்ரோ ரெயிலின் கேரியேஜ் மற்றும் டிக்கெட் விதிகள்–2023 சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டன.
அந்த விதிகளின் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயிலில் முதல்முறையாக மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்பு எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. பெங்களூருவில் இருந்து தானமாக பெறப்பட்ட நுரையீரல் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து மதியம் 2.07 மணிக்கு மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தை மருத்துவக் குழுவினர் அடைந்தனர். மெட்ரோ ஊழியர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் ஒத்துழைப்புடன், மருத்துவக் குழு நுரையீரலை 7 மெட்ரோ நிலையங்களை கடந்து, வெறும் 21 நிமிடங்களில் — மதியம் 2.28 மணிக்கு ஏ.ஜி.டிஎம்.எஸ். (AG-DMS) மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நுரையீரல், கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடனடியாக மாற்று அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கை, மெட்ரோ ரெயில்களின் சமூகப் பயன்பாட்டை வெளிப்படுத்தும் சிறப்பான முன்னேற்றமாக சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!