சொகுசு வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தில் கூலி தொழிலாளி பலி!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மேல்விஷாரம் பகுதியில் வசித்து வந்தவர் ஜாங்கீர். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். தனது இருசக்கர வாகனத்தில் "மிச்சர் அப்பளம்" மற்றும் மசாலா பொருட்களை சில்லறை வியாபாரமாக விற்பனை செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை அதிகாலை, வியாபாரத்திற்காக பொருட்களை எடுத்துச் செல்வதற்காக வீட்டை விட்டு புறப்பட்டார்.
அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேகமாக வந்த ஒரு சொகுசு டூரிஸ்ட் ஆம்னி வேன், ஆற்காடு அருகே வேப்பூர் பகுதியில் ஜாங்கீரின் இருசக்கர வாகனத்தை மோதியது. பின்னர் வாகனத்தை சாலையில் இழுத்துச் சென்றதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜாங்கீரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!