மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா !
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, அதற்கான கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளார்.
சொத்து வரி வசூல் முறைகேடு வழக்கில், அவரது கணவர் பொன்வசந்த் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சியிலும் திமுகவினரிடையிலும் பெரும் அழுத்தம் ஏற்பட்டது. இந்த வழக்கு கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், வரும் தேர்தலுக்கு முன் இதனால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் எழுந்தது.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆதரவுடன் மேயராக இருந்த இந்திராணி, “குடும்ப காரணங்களால்” ராஜினாமா செய்ததாக கூறியிருந்தாலும், அரசியல் அழுத்தம் மற்றும் வழக்கின் தாக்கமே இதற்குப் பின்னணியாகக் கூறப்படுகிறது.வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில், துணை மேயர் நாகராஜன் தலைமையில், அவரது ராஜினாமா அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!