அக்டோபரில் திருப்பதி திருமலையில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்!

 

அக்டோபர் மாதத்தில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள சிறப்பு விழாக்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி செல்பவர்கள் அதற்கேற்ப உங்களது பயண திட்டத்தை வகுத்துக்கோங்க.

நேற்று பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்த நிலையில், இன்று அக்டோபர் 2ம் தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று இரவு வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடைபெறுகிறது.

நாளை அக்டோபர் 3ம் தேதி பாக் சவாரி உற்சவம், அக்டோபர் 7ம் தேதி பவுர்ணமி கருடசேவை, அக்டோபர் 15ம் தேதி திருமலை நம்பி உற்சவம் தொடக்கம், அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்.

அக்டோபர் 23ம் தேதி பகினீஹஸ்த போஜனம், அக்டோபர் 24ம் தேதி திருமலைநம்பி சாத்துமுறை, அக்டோபர் 25ம் தேதி நாகுல சதுர்த்தி, அதையொட்டி பெரிய சேஷ வாகன வீதிஉலா, அக்டோபர் 27ம் தேதி மாணவாள மாமுனிகள் சாத்துமுறை, அக்டோபர் 28ம் தேதி சேனை முதலியார் வருட திருநட்சத்திரம், அக்டோபர் 29ம் தேதி மாலை புஷ்ப யாக மகோற்சவ அங்குரார்ப்பணம், அக்டோபர் 30ம் தேதி புஷ்ப யாகம், அக்டோபர் 31ம் தேதி பூதத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், யாஜ்ஞவல்க்ய ஜெயந்தி நடக்கிறது” என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?