காதலியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட காதலன்... தற்கொலை என நாடகமாடியது அம்பலம்!
தன்னைத் திருமணம் செய்துக் கொள்ள தொடர்ந்து வற்புறுத்தி வந்த இளம்பெண்ணைக் கொன்று விட்டு, தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை செய்துக் கொண்டதாக நாடகமாடிய காதலனைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், திருமணம் செய்துக் கொள்வது குறித்து காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது அம்பலமாகியுள்ளது.
கைதான இளைஞரும், கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தனது காதலனைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். திருமணத்திற்கு உடன்படாத அந்த இளைஞர், சம்பவத்தன்று ஏற்பட்ட ஆவேசத்தில் இளம்பெண்ணைத் தாக்கியதோடு, அவரை மூச்சுத் திணறடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் கொலையை மறைப்பதற்காக, அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டது போல உடலைத் தூக்கில் மாட்டிவிட்டு, எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து தப்பியோடி, தற்கொலை போன்று நாடகமாடியுள்ளார்.
இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதும் உறுதியானது.
உயிரிழந்த பெண்ணின் செல்போன் அழைப்புகள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த காதலனைத் தேடி வந்தனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து முறைப்படி கைது செய்யப்பட்டார்.
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!