மனோஜ் பாண்டியன் திடீர் ராஜினாமா... தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!
அலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவின் முக்கிய முகங்களிலொருவருமான மனோஜ் பாண்டியன், இன்று (நவம்பர் 4) திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தார். இணைந்த சில நிமிடங்களிலேயே தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திராவிடக் கொள்கைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் உறுதியாக காத்து வரும் தலைவராக மு.க. ஸ்டாலின் உள்ளார். அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவது எனக்கு பெருமை,” என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அதிமுக பா.ஜ.க-வின் கிளைக் கழகமாக மாறிவிட்டதாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய கட்சியின் அடிப்படை மதிப்புகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அவரின் இந்த முடிவு, ஓ.பி.எஸ் அணிக்கு பெரிய பின்னடைவாகவும், அதிமுக தலைமையில் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. அண்மையில் ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை சந்தித்திருப்பது, மனோஜ் பாண்டியனுக்கு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. வரவிருக்கும் தேர்தல்களில் ஆலங்குளம் தொகுதியில் இந்த மாற்றம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!