திருமண மோசடி... 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய இளைஞர்... அதிர வைக்கும் வாக்குமூலம்!
திருநெல்வேலியை சேர்ந்த 28 வயது சூர்யா, தன்னை ஒரு தொழில் அதிபராக காட்டி, திருமண இணையதளங்களில் மணப்பெண் தேவை என பதிவு செய்தார். இதனை பார்த்து தொடர்பு கொண்ட பல இளம்பெண்களை நெருங்கி பழகி, திருமணம் செய்வதாக கூறி அவர்களை ஏமாற்றி, நகை, பணம் பறித்தும், உல்லாசமாக ஊர்சுற்றி வந்தார்.
சுருக்கமாகச் சொல்லும் போது, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது திருமண ஆசையில் சிக்கி, இதற்காக அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கடந்த 2 மாதத்திற்கு முன்பு கைது செய்தனர். விசாரணையில், சூர்யா திருமண இணையதளம் மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய்களை பறித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சூர்யா, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை மேற்கொண்டதாக தன்னை அறிமுகப்படுத்தி, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் மற்றும் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து தனக்குத் சொந்தமாக உள்ளது போல காட்டி பெண்களை ஏமாற்றியுள்ளார். மேலும், பெண்களிடம் கார்கள், பங்களா வாங்க வேண்டும் என்றும், இடம் வாங்கி தருவதாகவும் கூறி நகை, பணம் பறித்தது போலீசார் விசாரணையில் ஹெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!