மெக்சிகோ பெண் அதிபருக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது!
மெக்சிகோவின் முதல் பெண் அதிபரான கிளாடியா ஷீன்பாம் மீது பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வில் வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்களுடன் தளர்வான சூழலில் கலந்துரையாடிக்கொண்டிருந்த அதிபர் ஷீன்பாம், பாதுகாப்பு படையினர் குறைவாக உடன் சென்ற நிலையில், சிலருடன் புகைப்படம் எடுக்கும் தருணத்தில் இந்த அத்துமீறல் நடந்தது.
அவரை அணுகிய வாலிபர், முதலில் தோளில் கை வைக்க முற்பட்டதும், உடனடியாக கட்டுப்பாடில்லாமல் அவரை திடீரெனத் தொட்டு முத்தமிட முயன்றார். தன்னைக் காத்துக்கொள்ள விழித்துக் கொண்ட அதிபர் கிளாடியா, உடனடியாக அந்த வாலிபரிடம் இருந்து விலகினார். அருகிலிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
தொடர்ந்து போலீசார் புகார் பெற்றதும், குறித்த வாலிபரை கைது செய்து விசாரணை தொடங்கினர். பெண் அரசியல்வாதிகளுக்கு எதிரான அத்துமீறல், தகாத நடத்தை சம்பவங்கள் அதிகமாகும் நேரத்தில், நாட்டின் தலைமைத்துவத்தையே குறிவைத்து நடந்த இந்த அவலம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் புதிய கேள்விகள் எழுந்துள்ளன.பெண் தலைவர்களின் பாதுகாப்பில் உலகளவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இந்த சம்பவத்தால் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!