அக்.7 முதல் ராணுவ தொழில் மாநாடு... பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்!
தமிழகத்தில் சென்னையில் அக்டோபர் 7 முதல் 9ம் தேதி வரை, வான்வெளி மற்றும் ராணுவ தளவாட துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில், வான்வெளி மற்றும் ராணுவ துறை தொழில் நிறுவனங்களின், ரூ 75,000 கோடி முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழக அரசின், ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னையில் அக்டோபர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை, ‘ஏரோடிப்கான் 25’ அதாவது, ‘ஏரோஸ்பேஸ் அண்டு டிபென்ஸ் மீட்டிங்’ மாநாட்டை நடத்துகிறது.
இந்த மாநாட்டை இந்தியாவின் ராணுவ அமைச்சகம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பி.சி.ஐ., ஏரோஸ்பேஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதில், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. கு
றிப்பாக வான்வெளி துறையில் முன்னணியில் உள்ள, ‘ஏர்பஸ், போயிங், டசால்ட், சப்ரான்’ நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தில் முதலீடு செய்யும்படி நிறுவனங்களுக்கு மாநில அரசு அழைப்பு விடுக்க உள்ளது.அக்டோபர் 7 முதல் 9ம் தேதி வரை ராணுவ தொழில் மாநாடு... பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்!
தமிழகத்தில் சென்னையில் அக்டோபர் 7 முதல் 9ம் தேதி வரை, வான்வெளி மற்றும் ராணுவ தளவாட துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில், வான்வெளி மற்றும் ராணுவ துறை தொழில் நிறுவனங்களின், ரூ 75,000 கோடி முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழக அரசின், ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னையில் அக்டோபர் 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை, ‘ஏரோடிப்கான் 25’ அதாவது, ‘ஏரோஸ்பேஸ் அண்டு டிபென்ஸ் மீட்டிங்’ மாநாட்டை நடத்துகிறது.
இந்த மாநாட்டை இந்தியாவின் ராணுவ அமைச்சகம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பி.சி.ஐ., ஏரோஸ்பேஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதில், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
குறிப்பாக வான்வெளி துறையில் முன்னணியில் உள்ள, ‘ஏர்பஸ், போயிங், டசால்ட், சப்ரான்’ நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தில் முதலீடு செய்யும்படி நிறுவனங்களுக்கு மாநில அரசு அழைப்பு விடுக்க உள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!