ரஷ்யாவில் இருந்து 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி... மத்திய அரசு தகவல்!
ரஷ்யாவில் இருந்து 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறி இந்தியா மீது 50 சதவீதம் இறக்குமதி வரிவிதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இருப்பினும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை ஒருபோதும் நிறுத்த மாட்டோம் என மத்திய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில் கடந்த மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து தினமும் 47 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் தினமும் 16 லட்சம் பீப்பாய்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது நாட்டின் முழு இறக்குமதியில் 34 சதவீதம் ஆகும். அமெரிக்காவில் இருந்து 4 சதவீதம் அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் இறக்குமதியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!