undefined

ஒரே பாரதம், உன்னத பாரதம்....  பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து! 

 

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், தீபாவளியின் புனிதமான தருணத்தில் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி என குறிப்பிட்ட அவர், “நீதியை நிலைநாட்டவும், அநீதியை எதிர்த்துப் போராடவும் கடவுள் ராமர் தைரியம் அளித்துள்ளார்” என்றார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை எடுத்துக்கூறிய அவர், அதில் இந்தியா நீதியை நிலைநாட்டி, அநீதிக்கு பழிவாங்கியதாக குறிப்பிட்டார். வரலாற்று சாதனைகள் நிறைந்த இந்த காலகட்டத்தில், நாடு அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களிலும் முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நவராத்திரி முதல் நாளில் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டதால் மக்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து வருகிறார்கள் என்றும், உலகம் பல நெருக்கடிகளை சந்தித்தாலும் இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும் பிரதமர் கூறினார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி “சுதேசி” என பெருமையுடன் சொல்ல வேண்டுமெனவும், “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற உணர்வை ஊக்குவிப்போம் எனவும் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!