undefined

 தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் இடையே பகைமை உருவாக்கும் அற்ப அரசியல் முயற்சி... பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்! 

 
 

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 30 அன்று சாப்ப்ரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, “தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்” என்று கூறினார். மேலும், “காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் பீகார் மக்களை தங்கள் மாநிலங்களில் அவமானப்படுத்துகின்றனர்; தெலங்கானா, கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவமதிக்கின்றனர்; தமிழ்நாட்டில் தி.மு.க. கடின உழைப்பாளி பீகார் மக்களைத் துன்புறுத்துகிறது” என குற்றம் சாட்டினார்.

இந்தக் கருத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.  “இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமராக இருக்க வேண்டியவர் மோடி. ஆனால், அரசியல் நலனுக்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பேச்சாற்றுவது பிரதமர் பதவியின் மாண்பை இழக்கச் செய்கிறது. இது ஒரு தமிழனாக எனக்கு வேதனையளிக்கிறது,” என்றார்.

மேலும், “மோடியின் பேச்சு தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் இடையே பகைமை உருவாக்கும் அற்ப அரசியல் முயற்சி. ஒடிசா, பீகார் அல்லது வேறு எங்கு சென்றாலும், பா.ஜ.க. தலைவர்கள் தமிழர்களை குறிவைத்து பேசுகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளை நிறுத்தி, நாட்டின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்,” என ஸ்டாலின் வலியுறுத்தினார். மோடியின் “தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்” என்ற குற்றச்சாட்டை ஸ்டாலின் முழுமையாக மறுத்து, அது தேர்தல் அரசியலுக்காக பரப்பப்படும் தவறான பிரச்சாரம் எனக் கூறினார். பிரதமரின் இந்தப் பேச்சு தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன், ஸ்டாலினின் கண்டனம் தமிழக அரசின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!