Come Back ஷமி... கணுக்கால் அறுவை சிகிச்சை நிறைவு!
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் முகம்மது ஷமி. வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி குதிகால் அறுவை சிகிச்சைக்காக ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு வெற்றிகரமாக குதிகால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், விரைவில் மீண்டு வருவேன் எனவும் ஷமி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் முழு உடற்தகுதி பெற சிறிது காலம் ஓய்வு தேவை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
2023 நவம்பரில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு தற்காலிகமாக மற்ற போட்டிகளிலிருந்து விலகுவதாக ஷமி அறிவித்தார். இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் விளையாடவில்லை. அதே போல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகினார். அதே போல் ஷமி 2024 ஐபிஎல் முழுவதும் விளையாட மாட்டார் என ஐசிசி அறிவித்துள்ளது. 2022 மற்றும் 2023 ஐபிஎல் இரண்டிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!