undefined

பிரபல கிரிக்கெட் வீரர் மீது பணமோசடி வழக்கு... !!

 

 முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இவர்   2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசடியில் ஈடுபட்டதால் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   2019ல் இவரின்  வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இருந்தும் 2021 மற்றும் 2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணி நிர்வாகமும் தேர்ந்தெடுக்கவில்லை.  

இந்நிலையில் தற்போது  ஸ்ரீசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர் மீது கண்ணூரை சேர்ந்த சரீஷ் பாலகோபாலன் என்பவர் போலீசில் பணமோசடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் "கடந்த 2019ல்  கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் நண்பர்கள் ராஜிவ் குமார், வெங்கடேஷ் கினி  இருவரும் என்னிடம் வந்தனர்.  அவர்கள் கர்நாடக மாநிலம் கொல்லூரில் விளையாட்டு பயிற்சி மையம் தொடங்க இருப்பதாகவும், அதில் ஸ்ரீசாந்த் பங்குதாரராக இருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த பயிற்சி மையத்திற்கு முதலீடு செய்தால் என்னையும் பங்குதாரராக நியமிப்பதாக தெரிவித்தனர்.


 இதனை நம்பி அந்த நிறுவனத்தில்   ரூ.18.7 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் தற்போது வரை விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவில்லை. பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வருகின்றனர்' என புகார் அளித்துள்ளார்.  இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்