வாவ்... பணமே இல்லாமல் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்...!!
பேடிஎம், கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற பணப்பரிவர்த்தனை தளங்களில் இனி வங்கிக்கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் பரிவர்த்தனை செய்யும் வசதியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.இந்தியா முழுவதும் நடைபாதை, சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள் தொடங்கி மல்ட்டிபிளக்ஸ் மால்கள், சினிமா தியேட்டர்கள் வரை அனைத்திலும் பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி வருகிறது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் தற்போதைய நாட்களில் இதனை மேலும் மேம்படுத்தவும், எளிதான நடைமுறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் ஆர்பிஐ பல அதிரடி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி டெபிட் கார்டு இல்லாமல் பணம் செலுத்தும் மற்றும் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலானோர், ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட் வசதிகளைப் பெற்றுள்ளதால், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான பயன்பாடுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யுபிஐ பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 6.57 பில்லியன் என அறிவித்துள்ளது. அதாவது 657 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 628 கோடி பரிவர்த்தனைகளும், ஜூன் மாதத்தில் 586 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு கிராமப்புறங்கள் உட்பட நாட்டில் அனைத்து பகுதிகளிலும் யுபிஐ பரிமாற்றங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் இனி இந்த யுபிஐ அப்ளிகேஷன்களை கிரெடிட் கார்டு போல பயன்படுத்தலாம். இதன்படி வங்கிகள் உங்கள் தகுதிக்கேற்ப அதிகபட்ச தொகையை முன்கூட்டியே நிர்ணயிக்கும். அதன் பிறகு வங்கிக்கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் கூட யுபிஐ மூலம் கிரெடிட் தொகையினை செலவு செய்யும் வசதி வழங்கப்படும். இதனால் யுபிஐ கட்டணங்கள் மேலும் விரிவடையும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!