ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் தற்கொலை.. பாம்பு கடித்து மகள் பலியான பரிதாபம்!

 

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் கணேசன் - நாகலட்சுமி (31) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்ஷினி (10), தேன்மொழி (9), சண்முகப்பிரியா (5), பாண்டி சிவானி (4) என்ற 5 பெண் குழந்தைகள் உள்ளன.

கணேசன் கோவையில் உள்ள பஞ்சாலையில் பணிபுரிந்து வருகிறார். 8ஆம் வகுப்பு வரை படித்துள்ள நாகலெட்சுமி, தனக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி வேலைவாய்ப்பு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அதனை ஏற்று அவருக்கு சொந்த கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டது. 

தொடர்ந்து அப்பணியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது 2 பெண் குழந்தைகளுடன் மையிட்டான் பட்டியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, ஓடும் அரசு பேருந்தில் இருந்து நாகலட்சுமி குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.
100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார், ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோரே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இதனால் நாகலட்சுமியின் குழந்தைகள் மதுரையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு பேரை பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

மற்றொரு 9 வயதான குழந்தை விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள் அந்த பகுதியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!