undefined

இன்சூரன்ஸ் பணத்திற்காக மகனை கொன்ற தாய்... விசாரணையில் அதிர்ச்சி!

 

உத்தர பிரதேசத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது 25 வயது மகனை திட்டமிட்டு கொன்ற தாயின் கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் தேஹட் மாவட்டம் அங்கத்பூர் பகுதியைச் சேர்ந்த மம்தா சிங் என்பவர், கணவரை சில ஆண்டுகளுக்கு முன் இழந்தார். பின்னர் மயங்க் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஆனால், இந்த உறவு குறித்து அவரது மகன் பிரதீப் சிங் (25) கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். தாயை பலமுறை எச்சரித்தும் பயனில்லை.

இதற்கிடையில், மம்தா சிங் தனது மகன் பிரதீப்பின் பெயரில் மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான 4 இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்திருந்தார். இதனால், இன்சூரன்ஸ் பணத்தையும் காதலையும் ஒன்றாகக் காப்பாற்ற ஒரே வழி மகனை அகற்றுவதே என முடிவு செய்தார்.

அதன்படி, மம்தா தனது கள்ளக்காதலன் மயங்க் மற்றும் மயங்கின் சகோதரர் ரிஷி ஆகியோருடன் சேர்ந்து கொலைத் திட்டம் தீட்டினார். திட்டப்படி, பிரதீப்பை இரவு உணவுக்காக வீட்டிற்கு வருமாறு அழைத்தார். வழியில் வந்தபோது மயங்க், ரிஷி இருவரும் அவரை சுத்தியலால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை நெடுஞ்சாலைக்கு அருகே வீசி விபத்துப் போல் சித்தரிக்க முயன்றனர்.

ஆனால் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்த போது, பிரதீப்பின் உடலில் கடுமையான தாக்குதலுக்குரிய காயங்கள் இருப்பது உறுதியானது. விசாரணையில் மயங்க் கைது செய்யப்பட்டு, “மம்தாதான் கொலைக்குத் திட்டம் தீட்டினார்; சம்பவத்தின் போது அவரும் அங்கு இருந்தார்” என்று ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில், ரிஷி போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற போது அவர் காலில் சுட்டு பிடிக்கப்பட்டார். வழக்கின் முக்கிய குற்றவாளியான மம்தா சிங் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்வதற்காக போலீசார் சிறப்பு குழுவை அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த கொடூரச் சம்பவம், “பாசத்தையும் பணத்தையும் இடம் மாறி பார்த்த தாயின் இரக்கம் இன்றி நடந்த கொலை” என சமூகத்தில் கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?