அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கழிவறையில் வீசி சென்ற தாய்!
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பின்புறம் உள்ள பொது கழிப்பறை கோப்பைக்குள் பச்சிளம் ஆண் குழந்தை சொருகிய நிலையில் இறந்து கிடந்ததையும், அப்பகுதி முழுவதும் ரத்தம் சிதறிய நிலையில் இருந்ததையும் நேற்று காலை அங்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் மற்றும் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று அதிகாலை பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணி பெண், கழிவறையில் பெற்ற குழந்தையை கொன்று கோப்பையில் சொருகிவிட்டு சென்றிருக்கலாம் என தெரியவந்தது.
இதையடுத்து பிரசவ வார்டு, அவசர விபத்து பகுதி, மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டும், அவசரமாக நேற்று முன்தினம் இரவு வந்த கர்ப்பிணி பெண்களின் விவரங்களையும் போலீசார் கைப்பற்றி. பச்சிளங்குழந்தையை பெற்றெடுத்து கழிவறையில் வீசி சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!