எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி!!
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் கே.என். நேரு ,முத்துசாமி, சாமிநாதன் உடன் இருந்தனர்.பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு இவைகளுக்காக தொடர்ந்து 75 ஆண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்தவர் எம்.எஸ் சுவாமிநாதன்.இவரது மறைவு குறித்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்.எஸ் சுவாமிநாதன் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக சுவாமிநாதன் ஆற்றிய பங்களிப்புக்காக இவர் பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படுகிறார். உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்தவர். இவர் .
சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உட்பட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றவர். உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் - வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கெளரவிக்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...