undefined

நா.த.க நிர்வாகி கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிகள் இருவர் அதிரடியாக கைது!

 

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 2 முக்கிய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாநகரம் தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் ஏராளமானோர் நடைபயிற்சி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 16ம் தேதி காலை அந்த பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணை செயலாளர் பாலசுப்ரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்.இதையடுத்து தல்லாகுளம் போலீஸார் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இன்று முக்கிய குற்றவாளிகளான மகாலிங்கம் மற்றும் அழகு விஜய் (அப்பா, மகன்) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பாரத், நாகை இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.

அப்போது, ​​செல்லூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து 4 பேரும் நடந்து சென்றது தெரிய வந்த போலீஸார், அவர்களை பிடிக்க முயன்று வருகின்றனர். போலீஸ் தங்களை பின்தொடர்வதை உணர்ந்த பாரத், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகியோர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதிக்கின்றனர். அப்போது 3 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், மூவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!