undefined

 இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் காலமானார்!

 
 

தமிழ் சினிமாவில் 90களின் இறுதியில் துள்ளலான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் காலமானது. இவர் இசை உலகில் திறமையான இசையமைப்பாளராகவும், திரையுலகில் பிரபலமாகவும் இருந்து வந்தார்.

சபேஷ், அவரது சகோதரர் முரளியுடன் இணைந்து தேவாவுக்கு பக்கபலமாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சமுத்திரம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, மாண்புமிகு குடும்பத்தார் போன்ற படங்களில் அவர்களின் இசை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. தேவாவின் இசைப் பயணத்தில் சபேஷ்-முரளி கூட்டணியின் பங்களிப்பு மறக்க முடியாதது.

கடந்த 21ம் தேதி உடல் நிலை குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சபேஷ் இன்று காலமானார். இதனால் தேவாவின் இசை நிகழ்ச்சிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சபேஷின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர், அவரது இசை மற்றும் சகோதரப் பாசம் என்றும் நினைவில் இருக்கும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!