சமந்தாவுக்கு மயோசிடீசை தொடர்ந்து அடுத்த புதுப்பிரச்சனை. ..ரசிகர்கள் ப்ரார்த்தனை!!

 

தமிழ் ரசிகர்களின்   கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா ரூத் பிரபு.  இவர் 2021ல் கணவர்  நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.  அதன் பிறகும் நடிப்பை தொடர்ந்தார்.  திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பின்பும் கூட, தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கலாம் என்ற புது ட்ரெண்டை தமிழ் நடிகைகளிடையே உருவாக்கினார்.    கணவரின் பிரிவால் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா ஆன்மிக சுற்றுலாப்பயணம்  மேற்கொண்டார்.  நாக சைதன்யாவை பிரிந்த சில மாதங்களில்,  மயோசிட்டிஸ் எனும் தோல் பிரச்சனையால் சமந்தா பாதிக்கப்பட்டார்.  

நம்பிக்கையுடன் கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க   டப்பிங் பணிகளை மேற்கொண்டது ரசிகர்களை பிரமிக்க வைத்தது.  அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்த பிறகு   உடல் நலம் தேறிய சமந்தா, தன் கைவசம் இருந்த குஷி படம் மற்றும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து முடித்தார்.   மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடையும் வரை தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகிஇருக்க  சமந்தா முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதனால் தற்போது வரை சமந்தா, எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை. ஆனால் தற்போது சில பாலிவுட் படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


தற்போது சமந்தா மயோசிட்டிஸ் சிகிச்சையில் இருக்கும் நிலையில்,  ​​சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராமில்  கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.இதில் ரசிகர்களில் ஒருவர்  சமந்தாவின் சருமம் குறித்து கேள்வி எழுப்பினார்.  மேலும் அவர் மயோசிடிஸ் சிகிச்சைக்காக எடுக்க வேண்டிய ஸ்டீராய்டு ஷாட்களின் காரணமாக அவரது தோலின் தன்மை மாறிவிட்டதாக கூறியுள்ளார். சமந்தா இது குறித்து ”தோலில் Pigmentation அதிகம் இருப்பதால், அதை சரி செய்ய தனி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் ” எனக் கூறியுள்ளார்.  இந்த சிகிச்சைக்கு பாடகி சின்மயி தான் சமந்தாவுக்கு உதவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு சமந்தாவுக்கு விரைவில் குணமடைய வேண்டி  பிரார்த்தனை செய்வதாக கூறி வருகிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!