undefined

 மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மின்கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாப் முன்பு நடந்தது. தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் பாக்யராஜ் தலைமை தாங்கினார். 

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், தொகுதி செயலாளர், மாரி சிவா, தொகுதி பொறுப்பாளர்கள் திருச்செந்தூர், ஞானசேகரன், திருவைகுண்டம், ஜேசுராஜ், ஓட்டப்பிடாரம் வைகுண்ட மாரி, கோவில்பட்டி தங்கம், மாரியப்பன், விளாத்திகுளம், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!