undefined

ரவுடி நாகேந்திரன் உடல் 4 நாட்களுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. உடல் முன் மகன் திருமணம்!

 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி நாகேந்திரன், கல்லீரல் கோளாறால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை ஸ்டான்லி மருத்துவமனையில் முடிவடைந்தது.

நாகேந்திரனின் உறவினர்கள், பிரேத பரிசோதனைக்குப் போது தங்கள் சார்பில் ஒரு தனியார் மருத்துவரை அனுமதிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது. பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா மேற்பார்வையில் டாக்டர் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவ குழு பிரேத பரிசோதனை செய்தது. இதில் தடயவியல் துறை தலைவர் பிரியதர்ஷினி, டாக்டர்கள் நாராயணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரிலுள்ள நாகேந்திரனின் வீட்டில் உறவினர்கள், ஆதரவாளர்கள் திரண்டதால் அங்கு போலீசார் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிந்த உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். அஞ்சலிக்குப் பிறகு மதியம் 2 மணிக்கு வியாசர்பாடி முல்லைநகர் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?